பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் சில சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த ஆணைக்குழுவின் அனைத்து பிரதேச மற்றும் மாவட்ட காரியாலங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்களின் பிரதிகள், காணிப்பதிவு பிரதிகளை வழங்கும் சேவைகள், திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் காலை 8.30 முதல் மாலை 4.30 வரையான காலப்பகுதியினுள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Be First to Comment