யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுமி ஒருவர் கிளிநொச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று அவரின் உறவினர்கள் கூறுகின்றனர்.
எனினும், இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
யாழ்ப்பாணம் புறநகரப் பகுதியில் வசிக்கும் சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை தேவை ஒன்றின் நிமித்தம் யாழ்ப்பபாணம் நகரத்துக்கு சென்றுள்ளார். அந்தச்சமயம் கும்பல் ஒன்றால் அவர் கடத்திச் செல்லப்பட்டு கிளிநொச்சிப் பகுதியில் வைத்து வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என்று கூறப்படுகின்றது.
மீட்கப்பட்ட சிறுமி கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுகு்கப்படவில்லை. இதையடுத்து வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
Be First to Comment