யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கு இடையிலான தொழிற்பாடுகளை எதிர்வரும் 1ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள படிமுறைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு வெளியிட்டுள்ளது.
அடிப்படை சர்வதேச ஒழுங்குபடுத்தல் தேவைகளை உறுதிப்படுத்திக் கொண்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான தொழிற்பாடுகள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
பின்னர் கொவிட் 19 தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தென்னிந்திய விமான நிலையம் வரை வாடகை விமானத் தொழிற்பாடுகள் மற்றும் நேர அட்டவணைக்கு அமைய, விமானப் பயணங்களை மேற்கொள்வதற்காக சர்வதேச மற்றும் உள்ளுரில் நிறுவப்பட்டுள்ள விமான நிறுவனங்கள் தற்போது கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இந்தநிலையில், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதற்கான படிமுறைகளை முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில், அதற்கு அமைச்சரவையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment