சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் டன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.
44 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 5,000 மெட்ரிக் டன் அரிசி, சீனத் தூதரகப் பிரதிநிதிகளால் இலங்கையின் பதில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது.
சீன மக்களால் இலங்கை மாணவர்களுக்கு 10, 000 மெட்ரிக் டன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை உணவு திட்டத்துக்கு உதவியளிக்கும் வகையில் 7,900 பாடசாலைகளுக்காக, எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்த அரிசி பகிர்ந்தளிக்கப்படுமென சீன தூதுரகம் தெரிவித்துள்ளது.
Be First to Comment