தற்போதைய நிர்வாகத்துடன் இணைந்து ஆட்சியில் ஈடுபடப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தாமை, இராணுவப் பாதுகாப்பை தேசியப் பாதுகாப்பு என வியாக்கியானம் செய்வதே நாட்டின் வீழ்ச்சிக்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திருடர்களுடன் தொடர்பு கொள்ளாது பிரதமர் பதவியை ஏற்கவில்லை.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஒரு சில உறுப்பினர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்களின் கொள்கைகளின்படி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை ஒரு போதும் காட்டிக்கொடுக்கமாட்டேன் என்றும், அத்தகைய நபர்களுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பங்கேற்பு அபிவிருத்தி கருத்தாக்கத்திற்கு அவர் அழைப்பு விடுத்ததுடன், அத்தகைய ஆட்சிக் கொள்கை நாட்டுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment