திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவதற்கான தீர்மானம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
திக்கம் வடிசாலையை தனியார் முதலீட்டாளர்களுக்கு கையளிப்பதன் மூலம் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக திக்கம் வடிசாலை கொத்தணி நிர்வாகத்தினர் இன்று (30.06.2022) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், குறித்த முயற்சிகளை நிறுத்துமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
இதனையடுத்து துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தனியார் முதலீட்டாளர்களும் சம்மந்தப்பட்ட கொத்தணி நிர்வாகத்தினரும் இணைந்த பொறிமுறை ஒன்றின் ஊடாக திக்கம் வடிசாலை அபிவிருத்தி செய்யப்படுமானால் ஆரோக்கியமானதாக இருக்கும் என்ற கருத்தினை முன்வைத்தார்.
கடற்றொழில் அமைச்சரின் கருத்தினை ஏற்றுக்கொண்ட துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரன, திக்கம் வடிசாலையை தனியாரிடம் கையளிக்கும் தீர்மானத்தை இடைநிறுத்துவதாகவும், இதுதொடர்பாக விரிவாக ஆராய்ந்து யாரையும் பாதிக்காத வகையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
Be First to Comment