Press "Enter" to skip to content

யாழில் கடத்தப்பட்ட மாணவிக்கு நீதிக்கோரி வீதிக்கு இறங்கிய மாணவர்கள்!

யாழில் அண்மையில் கடத்தப்பட்டு தகாத முறையில் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பாடசாலை மாணவிக்கு நீதி வேண்டி, மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த மாணவி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று வைத்தியசாலையின் மாடியிலிருந்து குதித்து உயர் மாய்க்க முயற்சித்துள்ளார்.

யாழில் கடத்தப்பட்ட மாணவிக்கு நீதிக்கோரி வீதிக்கு இறங்கிய மாணவர்கள்! | Students Take To Streets Justice Student Jaffna

 

ஆகவே குறித்த மாணவிக்கு நீதி வேண்டும் என தெரிவித்து பாடசாலை மாணவர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் இணைந்து இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளதுடன், மனித உரிமை ஆணைக்குழுவில் முறைபாட்டையும் பதிவு செய்துள்ளனர்.

மேலும் “சிறுவர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் “, “கடத்தப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டும்” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *