நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக வவுனியா தாதியர் கல்லூரியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த கல்லூரி இன்றுமுதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆசிரியர்கள் பணிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் எரிவாயு பற்றாக்குறை காரணமாக சமையல் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.
அத்துடன், பகல் வேளையில் மின்சாரம் தடைப்படுவதால் மருத்துவ நடவடிக்கைகள் மற்றும் கற்பித்தல் நடைமுறை என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment