கலென்பிந்துணுவௌ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 பாடசாலை மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து வசதிகள் இன்மையால் லொறியில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது லொறியின் பின்புற பகுதி இடிந்து விழுந்ததில் நேற்று இவ்விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் பாரவூர்தியில் 37 மாணவர்கள் பயணித்துள்ளதுடன் அவர்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
பிரதேச வாசிகள் காயமடைந்த மாணவர்களை கலென்பிந்துணுவௌ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தின் போது மாணவர் ஒருவரின் கால் பலத்த சேதமடைந்துள்ளதாக கலென்பிந்துணுவௌ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் விசாரணையின் போது தெரிவித்தார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துணுவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாரவூர்தியில் பாடசாலை சென்ற மாணவர்கள்: பாரவூர்தியின் பின்பகுதி இடிந்து வீழ்ந்ததில் 13 மாணவர்கள் காயம்!
More from UncategorizedMore posts in Uncategorized »





Be First to Comment