Press "Enter" to skip to content

யாழ்.ஊர்காவற்றுறை கடலில் குடும்பஸ்த்தர் ஒருவருடைய சடலம் மீட்பு

யாழ்.ஊர்காவற்றுறை கடலில் இருந்து இன்று காலை குடும்பஸ்த்தர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனது கடற்றொழில் உபகரணங்களை சரிசெய்தபின்னர் கடலுக்கு செல்ல முற்பட்டவேளையே உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மீனவர் ஒருவர் அவ்விடத்திற்கு வந்திருந்தபோது சடலத்தினை கண்டுள்ளார். இதனையடுத்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஐஸ்பழ வீதி, குருநகரை சேர்ந்த திரகரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *