Press "Enter" to skip to content

தனியார் பேருந்துகள் வாரத்தில் 5 சதவீதமளவில் சேவையில் ஈடுபடுத்தப்படும்:கெமுனு விஜேரத்ன

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்துகள் இனிவரும் நாட்களில் 5 சதவீதமளவில் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் பேருந்து கட்டணம் குறித்து மாத்திரம் அவதானம் செலுத்திய போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலக வேண்டும் எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
போக்குவரத்து சேவையில் பேருந்துகள் தாராளமாக ஈடுப்படுத்தப்படவில்லை.
ஆனால் பேருந்து கட்டணம் மாத்திரம் நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் தற்போதைய பேருந்து கட்டண திருத்தம் காணப்படுகிறது.
நிறைவடைந்த 06 மாத காலப்பகுதியில் மாத்திரம் எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பேருந்து கட்டணம் ஐந்து முறை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த பேருந்து கட்டண திருத்ததில் எரிபொருள் விலையேற்றம் குறித்து அவதானம் செலுத்தாமல் பேருந்து கட்டண திருத்தத்தை மேற்கொண்டிருக்கலாம்.
பேருந்து கட்டணத்தை அதிகரிக்காமல் எரிபொருள் நிவாரணத்தை பெற்றுக்கொடுக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து போக்குவரத்து அமைச்சர் அவதானம் செலுத்தவில்லை.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலக வேண்டும் என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வலியுறுத்தவுள்ளோம்.
பொதுப்பயணிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து அவர் அக்கறை கொள்ளவில்லை.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பேருந்துகள் நேற்று 8 சதவீதமளவில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டன.
எதிர்வரும் நாட்களில் 5 சதவீதமளவில் தான் போக்குவரத்து நடவடிக்கையில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *