நாளை முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.
பொது போக்குவரத்து சேவையை தொடர்ந்து கொண்டு செல்லும் நோக்கில் தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சாலைகளில் எரிபொருளை வழங்குமாறு அரசாங்கம் இதற்கு முன்னர் அறிவுறுத்தியது.
எனினும் இலங்கை போக்குவரத்து சபையின் சில பிரதேச பேருந்து சாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் வழங்கப்படுவதோடு சில இடங்களில் எரிபொருள் வழங்க மறுக்கப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
எனினும் முழுமையான அளவில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சகல தொடருந்து சேவைகளுக்குமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
Be First to Comment