யாழ்ப்பாணம் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கள் இடைநிறுத்தப்பட்டமையால் பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏ9 வீதியை மறித்து மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். பெட்ரோல் வாங்குவதற்காக அரச உத்தியோகத்தர்கள் தனியான வரிசையிலும் பொதுமக்கள் தனியான வரிசையிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் எரிபொருள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் திடீரென எரிபொருள் நிறைவடைந்தது எனக் கூறி வழங்கல் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே வாக்குவாதம் தோன்றியது அத்துடன் வீதியை மறித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. பின்னர் பொலிசார் நிலைமையினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
யாழில் எரிபொருள் போராட்டம்
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment