குருநாகல் Yaggahapitiya எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுநபரை தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிய சம்பவதையடுத்து இராணுவ அதிகாரி மீது இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரு இராணுவத்தினர் நபர் ஒருவரை பிடித்து பேச இராணுவ அதிகாரி எட்டி உதைத்துள்ளார். தாக்கியவர் இராணுவத்தின் லெப்.கேணல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
மேலும் இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஒரு குழு குழப்பி இடையூறு செய்ததாக அவர் கூறினார். பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு வேண்டுமென்றே எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மையை உருவாக்கி மோதலுக்கு காரணமாக இருந்துள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதேவேளை, சம்பவம் தொடர்பில் இரண்டு சிவிலியன்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
Daily mirror.
Be First to Comment