நாடு நாள் தோறும் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், சர்வகட்சி நிர்வாகம் ஒன்றுக்கு செல்லவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரியுள்ளார்.
இதனை விடுத்து தேவையற்ற பிரச்சினைகளை நாடாளுமன்றில் விவாதிப்பதில் பயனில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் தோல்வியடைந்து, தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றுக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதன் மூலம் நாட்டின் பிரச்சினை தீரப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய நிர்வாகத்தினால் சர்வதேச நம்பிக்கையை வெற்றிக்கொள்ளமுடியவில்லை.
எனவே, உடனடியாக சர்வகட்சி நிர்வாகத்துக்கு செல்லவேண்டும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
விமல் வீரவன்சவின் இந்தக்கருத்துக்களை எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஆமோதித்து கருத்துக்களை வெளியிட்டார்.
மகா சங்கத்தினரும் சர்வகட்சி அரசாங்கத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனினும் இந்த கருத்துக்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தமது எதிர்ப்பை வெளியிட்டார்.
சர்வகட்சியை அமைக்க எதிர்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அதனை எதிர்கட்சி தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
Be First to Comment