Press "Enter" to skip to content

பசிக் கொடுமை பிள்ளைகள் அழ, நடுவீதியில் தேம்பியழுத தந்தை

சாப்பாட்டு இன்மையில், தன்னுடைய பிள்ளைகள் பால் கேட்டு அழுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது எனத் தெரிவித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான 37 வயதானவர், ஹெம்மாத்தகம பிரதான நகரின் நடுவீதியில், தேம்பியழுதுகொண்டிருந்தார்.

பதாகையொன்றை வைத்து, அழுதுகொண்டிருந்த அவரை பார்த்த பொலிஸார், வர்த்தகர்கள் மற்றும் நகரத்தில் இருந்தவர்கள், அவருக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாங்கிக்கொடுத்தனர்.

மேசன் வேலைச் செய்யும் அவருக்கு 7 வயதில் பெண் பிள்ளையம் 13 வயதில் ஆண்ணொருவரும் இருக்கின்றனர். அவருடை மனைவிக்கு வேலையில்லை. பொருளாதார நெருக்கடி காரணமாக சீமெந்து விலை அதிகரித்துள்ளது. இதனால், அவருக்கு முறையாக வேலைக்கிடைப்பதில்லை.

“மேசன் சங்கமே பொறுமை காத்தது போதும், பொருட்களின் விலைக​ளை குறைத்து, ஏழ்மையானவர்களுக்கு நிவாரணம் கொடு” என்​றே அந்த பதாகைளில் எழுதப்பட்டிருந்தது.

7 வயதான பெண் பிள்ளை, பால் கேட்டு அழுகிறது. பிள்ளைகளுக்கு பால் மட்டுமல்ல, தன்னுடைய குடும்பத்தில் சகலருக்கும் நாளாந்தம் மூவேளையும் சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை. எனக்கு வேலைக்கிடைப்பதில்லை என்பதால், பிள்ளைகளை வளர்க்கமுடியவில்லை” என்றார்.

பிரதான வீதியில் அமர்ந்திருந்தவரின் அருகில் சென்று பொலிஸார் விசாரித்தனர். அதன்பின்னர், அங்கு குழுமியிருந்தவர்கள் இன,மத,மொழி பேதங்களை மறந்து, தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். கிடைத்த உதவிகளைக் கொண்டு, அந்நபருக்கு தேவையான பொருட்களை பொலிஸாரும், பொதுமக்களும், வர்த்தகர்களும் பெற்றுக்கொடுத்தனர்.

அதன்பின்னர், பொருட்களை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வீட்டுக்குச் செல்வதற்கும் வாகன உதவியும் செய்துகொடுக்கப்பட்டது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *