நாட்டில் எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய் விலையை கட்டாயம் அதிகரிக்க வேண்டியேற்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாட்டு மக்களுக்கு, மின்சாரம், நீர் மற்றும் எரிபொருள் என்பவற்றை குறைந்த விலைகளிலேயே அரசாங்கம் வழங்கி வந்தது.
இதற்காக ஏற்படும் மேலதிக செலவுகளை திறைசேரியினால் ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், தற்போதைய நிலைமையில் அதனை செய்ய முடியாது.
மண்ணெண்ணெய் தற்போது 87 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதற்காக 420 ரூபா செலவு ஏற்படுகிறது.
எனவே, எதிர்வரும் நாட்களில் கட்டாயமாக மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பட வேண்டும் என்றார்.
மண்ணெண்ணெய் விலையை அதிகரிக்கப்படும் என்கிறார் எரிசக்தி அமைச்சர்!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment