மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பேரில் பொலன்னறுவை, லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக அதிகாரியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (04) அதிகாலை 2.45 மணி அளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலின் போது உயிரிழந்த நபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
எவ்வாறாயினும், அறையில் நபர் ஒருவரைக் கண்டதாகவும் ஆனால் இருள் காரணமாக அவரை அடையாளம் காண முடியவில்லை எனவும் உயிரிழந்த பெண்ணின் கணவன் முன்னர் தெரிவித்திருந்தார்.
யமுனா பத்மினி என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Be First to Comment