கடன் உடன்படிக்கைகள் தீர்ந்துவிட்டதால், இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியா முன்கூட்டியே பணத்தை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள டொலர்கள் இல்லாத நிலையில், கடனில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளுக்காக கடந்த சில மாதங்களில் இந்தியா ஏற்கனவே 3.5 பில்லியன் டொலர் கடன் எல்லைகளை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இந்தநிலையில்,எரிபொருள் கொள்வனவுக்கான 500 மில்லியன் டொலர் கடன் எல்லை வசதி இந்தியாவிடம் இருந்து புதிய அனுமதியை இலங்கை எதிர்பார்க்கிறது.
எனினும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
ஐஓசியிடமிருந்து கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் சுமார் 450,000 டன் பெற்றோல் மற்றும் டீசலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது
Be First to Comment