காரைநகர் வலந்தலைச் சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று பெற்றோல் பவுசர் வந்ததாக தகவல் பரவிய நிலையில் அதிகாலை முதல் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பல நூறு பொதுமக்கள் பெற்றோலினைப் பெறுவதற்கு ஒன்று கூடினர்,
ஆனாலும் காரைநகர் பிரதேச செயலகத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட அட்டையின்படியே, பங்கீட்டு அடிப்படையில் கடந்த நாட்களாக பெற்றோல் விநியோகிக்கப்பட்டு வருகின்றது,
இவ்வாறான நிலையில் பொதுமக்கள்
பலரும் தங்களுக்கும் பெற்றோல் தரவேண்டும் என கோரிக்கைவிடுத்தபடி வலந்தலைச் சந்தியில் தமது வாகனங்களைக் கொண்டு மறித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்,
இவ்வாறானதொரு சூழ்நிலையில் காரைநகர் – யாழ்ப்பாணம் செல்லும் தனியார் மற்றும் CTB பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது





Be First to Comment