ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டுமென முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்று கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கையின் நிதியமைச்சர், பேரழிவிற்குத் திட்டமிட்டுள்ளார் எனவும் தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்க அவரிடம் எந்தவிதமான திட்டமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் சகல பொருளாதார நெருக்கடிகளும் டொலர் நெருக்கடியுடன் தொடர்புபட்டுள்ளதுடன், நிதியமைச்சர், நண்பர்களிடம் இருந்து கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தம்மிக்க பெரேரா கூறினார்.
நாட்டுக்கான பணப்புழக்கத் திட்டமிடலில் நிதி அமைச்சரிடம் எதிர்கால திட்டங்கள் எதுவும் இல்லை.
அத்துடன், டொலர் ஈட்டுதல், கடன் பெறுதல், நிதியுதவி, கிடைக்கக்கூடிய கடன் எல்லை வசதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான கடன் எல்லை வசதிகள் தொடர்பான அனைத்து விடயங்களையும் நிதி அமைச்சர் தாமதப்படுத்தியுள்ளார்.
இந்த காரணங்களுக்காக நிதியமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா வலியுறுத்தினார்.
Be First to Comment