இரண்டு ரஷ்ய எரிபொருள் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதிநிதிகள் இன்று இலங்கை வந்துள்ளனர்.
இரு பிரதிநிதிகளும் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது, எரிபொருள் இறக்குமதி தொடர்பில் சம்பந்தப்பட்ட எரிபொருள் நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட பிரதிநிதிகள் பஹ்ரைன் ஊடாக இந்த நாட்டிற்கு வரவேண்டியிருந்தது.
குறித்த பிரதிநிதிகளை வரவேற்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உள்ளிட்டோர் பிரசன்னமாகியிருந்தனர்
Be First to Comment