எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு எதிர்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாட்டின் தற்போதைய நிலவரங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Be First to Comment