போராட்டத்தை மையமாகக் கொண்டு நாளைய தினம் எந்த பஸ்ஸையும் இயக்கப்போவதில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொலிஸார் வீதியை மூடியதன் விளைவாக, மாற்று வழிகளைப் பயன்படுத்தும் போது எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாளை பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்படும் எனவும், ஆனால் மக்கள் போராட்டத்துக்கு தமது தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
பஸ் நடத்துனர்கள் இரண்டு நாட்களுக்குப் போதுமான எரிபொருளை மாத்திரமே பெறுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Be First to Comment