மேல் மாகாணத்தின் சில பொலிஸ் பிரிவுகளுக்கு இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் வௌியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்க்கொழும்பு, களனி, கல்கிஸ்ஸ, நுகேகொட, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
குறித்த பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் ஊடரங்கு உத்தரவு காலப்பகுதியில் வீட்டிலேயே தங்கியிருக்குமாறும், ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் குறித்த பகுதிகளினூடாக பயணிப்பதை தவிர்க்குமாறும் அவ்வாறு மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
Be First to Comment