Press "Enter" to skip to content

போராட்டத்தை வென்றெடுக்கும் ஒன்றிணைந்த பிரகடனம் வெளியீடு

போராட்டத்தை வென்றெடுக்கும் பிரகடனம் எனும் மகுடத்தில் சர்வ கட்சி செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மாநாட்டின் பிரகடன வெளியீட்டு நிகழ்வு நேற்று (06) கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம் பெற்றது.

போராட்டத்தை வெல்லும் பிரகடனம் ஆறு சிறப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதோடு, இதன் வெற்றிக்காக சர்வ கட்சிப் போராளிகள் தம்மை அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்தனர்.

நாட்டில் ஜனநாயகம் மேலோங்கும் ஆட்சியை நிறுவி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக முன்னெடுக்கப்படும் போராளிகளின் முயற்சிகளை பாராட்டுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதன் ஜனநாயக ரீதியிலான அனைத்து கோரிக்கைகளுக்கும் மாற்றுக் கருத்து இன்றி தான் உடன்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனாதிபதி மட்டுமல்ல என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவரது நிறைவேற்று அதிகாரம் சட்டமன்றத்துக்கும் நீண்டு செல்வதாகவும் அவர் தெரிவித்தார். எனவே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவது தொடர்பில் தமக்கு நிலையான ஒரு கருத்து இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், போராட்டத்தில் ஈடுபடும் அனைத்து குழுக்களும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு பங்களிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *