எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளுடன் நின்றிருந்ததுடன், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட 3 பேர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து வாள்கள் மற்றும் கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,
ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளினை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் வீதியில் பல நாட்களாக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இளைஞர் குழுவினர் ஒன்றிணைந்து புதிதாக ஒரு புதிய வரிசையினை ஏற்படுத்தியதுடன்,
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டபோது தங்களது வரிசையினருக்கே எரிபொருளினை வழங்க வேண்டும் என தெரிவித்து சண்டையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் நிலைமையினை கட்டுக்குள் கொண்டு வந்திருந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதுடன்,
காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள் மற்றும் பொல்லுகளை மீட்டிருந்தனர்இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Be First to Comment