பிரதமரால் கூட்டப்படும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக,நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு, அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
கோட்டாபயவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த நிலையிலேயே பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியானது.
Be First to Comment