கொழும்பு – காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதித் தடைகளை அகற்றி ஜனாதிபதி மாளிகை நோக்கி செல்ல முற்பட்ட போது, காவல்துறையினர், அவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
இதேவேளை, கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 19 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவரும் உள்ளடங்குவதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கோட்டாபயவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு, விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஆர்ப்பாட்டக் களத்துக்கு சென்று, ஆர்ப்பாட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்
Be First to Comment