Press "Enter" to skip to content

கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பு – கோட்டை – யோர்க் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக காவல்துறை கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பில் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

களனி பல்கலைக்கழத்திற்கு அருகிலிருந்து நேற்று மதியம் பேரணியை ஆரம்பித்த அவர்கள், நேற்று மாலை கொழும்பு – கோட்டையை வந்தடைந்து இரவு முழுவதும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்த நிலையில், குறித்த பகுதியில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன்போது, போராட்டத்தில் ஈடுபடுகின்றவர்கள்.

யோர்க் வீதிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடைகளை அகற்றி, முன்னோக்கிச் செல்ல முயற்சித்தபோது, அவர்களைக் கலைப்பதற்காக காவல்துறையினர் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

உலக வர்த்தக மையத்தின் வளாகத்தில், வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *