தற்போதைய நிலைமையிலும் ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகிக்ககூடிய இயலுமை உள்ளதா என்று சிந்திக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. இந்தநிலைமையை மாற்றி நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த பிரதமர், சபாநாயகர், அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து துரிதமாக செயற்பட வேண்டும்.
அத்துடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்ற பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தப்படக்கூடாது என்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், வரலாற்றுப் பெறுமதி மிக்க பொதுச் சொத்துக்களான ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களைப் பாதுகாக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
Be First to Comment