விரைவான தீர்வு அவசியம் – கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்
~~~~~~,
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்படுவது அவசியமாகுமென கடற்றொழில் அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்களுக்கிடையில் சபாநாயகர் தலைமையில் இன்று(09.07.2022) காணொளி மூலம் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
“கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை விளங்கிக் கொண்டவனாக, நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு, எமது அரசியல் யாப்பிற்கு உட்பட்டு – நாட்டின் தற்போதைய நிலைமையினையும் கருத்தில் கொண்டு, விரைவானதொரு தீர்வு எட்டப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Be First to Comment