இன்று (09) பிற்பகல் குருந்துவத்தை பிரதேசத்தில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை தாக்கிய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடத்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசேட விசாரணைகளை மேற்கொண்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதன்போது, சிரச ஊடகவியலாளர்கள் இருவரும் மற்றும் தெரண ஊடகவியலாளர்கள் இருவரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் தாக்கப்பட்டனர்.
Be First to Comment