பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான செய்தி சேகரிக்க சென்றிருந்த தொலைக்காட்சி சக்தி தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பெண் ஊடகவியலாளர்.
பொலிஸார் மற்றும் விசேட அதிரைப்படையினர் இந்த தாக்குதலை மேற்கொள்ளும் காட்சி தொலைக்காட்சியினூடக நேரலையாக ஒளிபரப்பானது.
படப்பிடிப்பாளர் நிலத்தில் வீழ்த்தப்பட்டு மிகவும் மோசமாகவும், கடுமையயாகவும் பொல்லுகளால் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளான 4 ஊடகவியலாளர்களும்
சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை ஊடக வியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் 3 விசேட அதிரடிப்படையினர்
உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.





Be First to Comment