ஆயிரக்கணக்கான புத்தகங்களுடனும், ஒரு நோய்வாய்ப்பட்ட பேராசிரியையை வீட்டின் உள்ளேயும் வைத்து; எதிர்காலத்தில் ஒரு பாடசாலைக்கு நன்கொடையாக எழுதி வைக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பரம்பரை வீடு பற்றி எரிவதை எவராலும் ஏற்க முடியாது. இலங்கையின் மிகப் பெரும் தனியார் நூல் நிலைய கட்டிடமாக இருந்தது.
எந்தவொரு ஆடம்பரப் பொருட்களும் இன்றி பழைய கால வயர் கதிரைகளும், பழைய கால மின் விசிறிகளும் இருந்த கட்டிடம். 49 வருட பொதுவாழ்வில் ஒருசதமேனும் சம்பளமாகப் பெற்றிராத, எந்தவித கொடுப்பனவும் பெற்றிராத, பிரதமராக பதவி வகித்த காலத்தில் கூட அரச வளங்கள் எதுவும் தன் வீட்டுக்குள் வரவிடாமல் பாதுகாத்த அரசியல்வாதியின் சொந்த இல்லம் இது.
எல்லாம் இன்று அழிந்து போனது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது என சமூக வலைதளைத்தில் பலர் தகவலை வெளியிட்டு வருகின்றனர்.
Be First to Comment