தற்போதைய சூழலில் மக்கள் கோரும் சர்வ கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு இடமளிப்பதே மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திறமையற்ற நிர்வாகம் காரணமாகவே, மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியதற்கான காரணமாகும். அரசியலமைப்பின் படி, மக்களின் நம்பிக்கைக்குரிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.
அவ்வாறு ஸ்தாபிக்கப்படும் சர்வ கட்சி அரசாங்கத்தினால் மக்கள் எதிர்நோக்கியுள்ள, எரிபொருள், எரிவாயு, உரம், உணவு தட்டுப்பாடு என்பனவற்றுக்கு தீர்வு காணும் போது, அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டியது சகல தரப்பினரின் பொறுப்பாகும் என பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
Be First to Comment