ஜனாதிபதியை அவரது இல்லத்தில் இருந்து துரத்தி, அவரை பதவி விலகச் செய்வதாக அறிவிக்க செய்தநிலையில், நீண்ட கால தீர்வைக் காண விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கைத் தலைவர்களை அமெரிக்கா இன்று வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகத் தயாராகி வரும் நிலையில், தேசத்தின் முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்புடன் இந்த தருணத்தை அணுகுமாறு இலங்கை நாடாளுமன்றத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது என்று வெளியுறவுத்துறை பேச்சாளர் அந்தனி ப்ளிங்கன் கோரியுள்ளார்.
நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கும், மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட மோசமான பொருளாதார நிலைமைகள் தொடர்பாக இலங்கை மக்களின் அதிருப்தியை நிவர்த்தி செய்வதற்கும் தீர்வுகளை கண்டறியவேண்டும்.
இதற்காக புதிய, அரசியலமைப்பு ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமும் விரைவாக செயல்படுமாறு தாங்கள் கேட்டுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களுக்கு அமைதியான முறையில் குரல் எழுப்ப உரிமை உண்டு. எனினும் போராட்டம் தொடர்பான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட எவரையும் முழுமையாக விசாரணை செய்யவும், கைது செய்யவும் மற்றும் வழக்குத் தொடரவும் தாம் அழைப்பு விடுப்பதாக பேச்சாளர் வலியுறுத்தியுள்ளார்
Be First to Comment