பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் எரிக்கப்பட்டமை உள்ளிட்ட அனைத்துச் செயல்களையும் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட சங்கம், வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும், மக்களின் உடைமைகளுக்கு சேதம் விளைவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) வன்முறைச் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும், நபர்களுக்கும் சொத்துக்களுக்கும் தீங்கு விளைவிக்க வேண்டாம் என்றும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள இடமளிக்க வேண்டாம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றது. தீ வைப்பு மற்றும் சொத்து சேதம் அமைதியான போராட்டத்தின் நோக்கங்களைத் தோற்கடிக்கும். இது நாட்டுக்கு சொல்லொணாத் தீங்கு விளைவிக்கும் மற்றும் பொருளாதாரத்தையும் இந்நாட்டு மக்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Be First to Comment