வவுனியா – பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்று விட்டு இளைபாறச் சென்ற ஒருவர் மயங்கி வீழ்ந்து மரணமானார்.
இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
கடந்த 5 தினங்களாக எரிபொருளுக்காக காத்திருந்த ஒருவரே இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
எரிபொருள் கிடைக்காமையால் நீண்ட நேரம் வரிசையில் நின்று விட்டு இளைப்பாறுவதற்காக நகரசபை முன்பாக உள்ள கடைப் பகுதிக்கு சென்ற போது அவர் மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னரே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் வவுனியா – கொக்குவெளி பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே மரணமானார்.
Be First to Comment