புஸ்ஸல்லாவை, காச்சாமலை வீடன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். இவ்விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
புஸ்ஸல்லாவை, பெரட்டாசி தோட்டத்திலிருந்து, புஸ்ஸலாவை நகரத்துக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றே, வீடன் பகுதியில் வைத்து மண்மேடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மிதிபலகையில் (ஃபூட் போர்ட்) பயணித்த இருவரே, பேருந்து மண்திட்டில் சாய்ந்ததால், அதில் சிக்குண்டு பலியாகியுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் பெரட்டாசி தோட்டத்தில் வசித்துவந்த சுரேன்ஜித் புஷ்பகுமார் (39) மற்றும் ஹெல்பொட 7 ஆம் கட்டை தோட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் கவிஷ்கர் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுமார் 80 பேர் வரை குறித்த பேருந்தில் யணித்துள்ளதாகவும், அதிகளவான பயணிகளை ஏற்றிச்சென்றதால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சிறு காயங்களுக்குள்ளானவர்கள் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் புஸல்லாவை, வகுகப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
விபத்து சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள், பேருந்தை தீயிட்டு கொளுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைதுசெய்யப்பட்டுள்ள அதேவேளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
புஸ்ஸல்லாவை
Be First to Comment