ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 13 என்ற திகதியிடப்பட்ட தனது பதவி விலகல் கடிதத்தில் நேற்று கையொப்பமிட்டதாகவும், அதனை சபாநாயகர் நாளை பகிரங்கமாக நாட்டுக்கு அறிவிப்பார் என்றும் தகவல் வட்டாரங்கள் தெரவிக்கின்றன.
ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கையொப்பமிடப்பட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அவர் அதனை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளிப்பார்.
இந்த கடிதம் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கோட்டாபய ராஜபக்சவின் ஜனாதிபதி பதவிக்காலம் முடிவடையும் அறிவிப்பை நாளை வெளியிடுவார்.
நேற்று மதியம் ராஜபக்ஷ ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இந்த அறிக்கையை ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் நிராகரித்து, ராஜபக்ஷ இன்னும் நாட்டில் இருப்பதாகவும், ஆயுதப்படையினரால் அவர் பாதுகாக்கப்படுகிறார் என உறுதிப்படுத்தின.
ஜூலை 9 மக்கள் எழுச்சிக்கு சற்று முன்பு, ஜனாதிபதி ராஜபக்ஷ கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து பாதுகாப்புப் படையினரால் வெளியேற்றப்பட்டார் என்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நாட்டின் கடல் எல்லைக்குள் கடற்படைக் கப்பலில் பாதுகாக்கப்பட்டார் எனவும் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், நேற்று காலை 9.30 அளவில் ஜனாதிபதி சுகயீனமடைந்ததாகவும் அதன் பின்னர் அவர் நாட்டிலேயே தங்கவைக்கப்பட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தினால் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாக ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.
அரசியலமைப்பின் ஏற்பாட்டில் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஜூலை 20 ஆம் திகதி புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறும் என்றும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளத
Be First to Comment