தென்மராட்சியில் சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குட்பட்ட அல்லாரை மற்றும் கைதடிப் பகுதியில் கொரோனா நோயாளர்கள் இருவர் நேற்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொற்றாளர்கள் இருவருக்கும் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பீ.சி.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களை அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட அசாதாரண நிலைமை காரணமாக பேருந்து, புகையிரதம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுகின்ற நெரிசல் நிலைமையால் கொரோனா மேலும் தீவிரமடையக்கூடிய அபாய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்து.
கடந்த வருடம் தென்மராட்சியில் அதிக கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், கொரோனா மரணங்களும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
தென்மராட்சியில் தலைதூக்கும் கொரோனா!
More from UncategorizedMore posts in Uncategorized »
- பருத்தித்துறையில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் !
- பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா? யாழில் பட்டதாரி அங்கிகளை அணிந்தவாறு கவனயீர்ப்பு..!
- மன்னார் நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி
- சீமெந்தின் விலையை குறைக்க தீர்மானம்
- கொழும்பு பங்குச் சந்தையில் வளர்ச்சி!
Be First to Comment