நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதற்காக இராணுவ கமாண்டோக்கள் குழுவொன்று வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தை அண்மித்த பொல்வதுவ சந்தியில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்தநிலையிலேயே நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Be First to Comment