நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் இன்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டது.
மேற்படி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு காவல்துறையினர் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இதன்போதான மோதலில் 15 பேர் காயமடைந்ததுடன், அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு – தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாடாளுமன்ற வீதியில் இடப்பட்டிருந்த இரும்பு வேலியை பெக்கோ இயந்திரம் கொண்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் தகர்த்தெறிய முற்பட்டுள்ளனர்.
அத்துடன், மேற்படி மோதல் சம்பவத்தின்போது, அங்கிருந்த நோயாளர் காவு வண்டியொன்றின் மீதும், தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
Be First to Comment