மக்கள் எழுச்சியின் வெற்றியை பறைச்சாற்றும் வகையில் புதிய ஜனாதிபதி தெரிவு அமைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைள் என்ன என்பது தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டி சபாநாயகர் அதனை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பெயரை பரிந்துரைப்பது எதிர்வரும் செவ்வாக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறும்.
அதன் பின்பு புதன்கிழமை வாக்கெடுப்பு இடம்பெற்று ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார்.
புதிய ஜனாதிபதி தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் முடியும்வரை ஜனாதிபதியாக செயற்படுவார்.
இதுவே, புதிய ஜனாதிபதி தெரிவுக்கான நடைமுறையாகும்.
புதிய ஜனாதிபதி தெரிவானது மக்கள் எழுச்சிக்கான வெற்றியாக அமையுமா இல்லையா என்பதே சமூகத்தில் முன்வைக்கப்படும் கேள்வியாக உள்ளது.
அரசியலமைப்புக்கு அவைமாக ஜனாதிபதி பதவி விலகியதன் பின்னர் பிரதமர் பதில் ஜனாதிபதியாக கடமையாற்ற வேண்டும் என்பதே நியதியாகும்.
எனினும் தற்போதைய பிரதமராமாக ரணில் செயற்படுகின்றார்.
இதன் காரணமாகவே நாம் பிரதமரை பதவி விலகுமாறு கூறுகின்றோம்.
பிரதமர் பதவி விலகினால் பதில் ஜனாதிபதியாக சபாநாயகரால் செயற்பட முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Be First to Comment