இலங்கை நாடாளுமன்றின் முதலாவது தமிழ் பேசும் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 33 வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – பண்ணாகத்தில் அமைந்துள்ள அமரரின் உருவச் சிலைக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
பண்ணாகம் கிராம அபிவிருத்தி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நினைவு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி- மேற்கு பிரதேச சபை தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன், பிரதேசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அன்னாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் தலைவராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Be First to Comment