ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செவ்வாய் கிரகத்திற்குச் சென்றாவது தனது இராஜினாமா கடிதத்தை வழங்குவாரா ? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பியுள்ளார். இராஜினாமா கடிதத்தை அனுப்புவதாக கூறிய கோட்டாபய ராஜபக்ச இன்று உலகத்தை சுற்றி வருவதாகவும், . இராஜினாமா கடிதத்தை எழுதுவதற்கு உலகின் மூலை முடுக்கெல்லாம் சென்று போதுமான நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளதாவும் முஜிபுர் எம்.பி தெரிவி்த்துள்ளார்.
69 இலட்சம் மக்களின் சம்மதத்துடன் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்ற கோட்டாபய ராஜபக்சவால் இன்று இலங்கையர்கள் இருக்கும் எந்த நாட்டிற்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆக செவ்வாய் கிரகத்துக்கோ, அல்லது எந்த மண்டலத்துக்கு சென்றாவது நாட்டில் அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இராஜினாமா கடிதத்தை உடனடியாக அனுப்ப வேண்டும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி தெரிவித்துள்ளார்.
Be First to Comment