Press "Enter" to skip to content

கோட்டாபய விலகும் வரை காத்திருப்பது அபத்தமானது. புதிய ஏற்பாட்டை அறிவித்துள்ள ஜேவிபி!

ஜனாதிபதி தனது பொறுப்பை மீறி நாட்டை விட்டு வெளியேறியதால் அவர் பதவி விலகும் வரையில் காத்திருப்பது அபத்தமானது என்று ஜனதா விமுக்தி பெரமுன தெரிவித்துள்ளது.

எனவே அரசியலமைப்பின் அடிப்படையில் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான உரிமை நாடாளுமன்றத்திற்கு உள்ளதாக ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தனது பதவி விலகலை சமர்ப்பிக்கவில்லையென்றால்இ அது பதவியை விட்டு சென்ற செயலாகவே ஊகிக்க முடியும் என்று செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்துள்ளார்.

துனிசிய ஜனாதிபதி பென் அலி தனது பதவி விலகலை அறிவிக்காமல் நாட்டை விட்டு ஓடிய சம்பவம் இதற்கு உதாரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அரசியலமைப்பின் சரத்து 38(2) இன் விதிமுறைகளுக்கு அமையஇ புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு சபாநாயகரும் பிரதம நீதியரசரும் நாடாளுமன்றத்தின் ஊடாக தீர்மானம் எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டை ஸ்திரப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வர ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *