பெற்றோல் பதிலீடுகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.
கல்கிஸை வலய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மேல் மாகாண புலனாய்வு அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவலின்படி கெஸ்பேவ காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று நேற்று மாலை மடபாத பகுதியில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது.
அங்கு பெற்றோலுக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய எரிபொருளொன்றை தயாரிக்கும் ஆலையொன்று சோதனையிடப்பட்டு, அதற்காக பயன்படுத்தப்பட்ட 165 லீற்றர் இரசாயனப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 18, 42 மற்றும் 48 வயதுடைய மடபாத மற்றும் பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment