பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள போதிலும் கட்சி எடுத்த தீர்மானத்தில் மாற்றம் இல்லை என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் வேட்பு மனுக்கள் கோரப்படும் போது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தானும் வேட்புமனு அளிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்
Be First to Comment